விசேட சுற்றிவளைப்பில் மூவாயிரத்து 560 பேர் கைது


பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரையின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவாயிரத்து 560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆயிரத்து 124 பேர் உள் ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரையின் பேரில் இன்று அதிகாலை 0300 மணி முதல் 7 வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 468 பேரும், வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 920 பேரும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 992 பேரும், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 53 பேரும், கைக்குண்டு மற்றும் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஆறாயிரத்து 20 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments