ரி56 ரக – 3000 துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது


சியம்பலாண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ரி56 ரக – 3000 துப்பாக்கி ரவைகளுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்ப்டடவர்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட சுஜியின் முக்கிய உதவியாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்த எம்.எம் வகையிலான துப்பாக்கி ரவைகளும், சொகுசு ரக வேனொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் லத்துவ ரொஷான், முன்னாள் கடற்படை உறுப்பினருடன் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காலி, ஹிக்கடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ரவைகளை வேனில் வைத்து காலிக்கு கடத்திய சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கமைய சியம்பலாண்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன பண்டாரவின் வழிநடத்தலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments