15 கிலோ மாவா போதைப்பொருளுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என தெரிய வருகின்றது.

அத்துடன், பிரதான சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments