மனைவியையே அழைத்துச் சொன்றோம் என்கிறார் கைதான சாரதி


யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் , குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். செம்மணி பகுதியில் வைத்து யுவதி ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார“ தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் பிரகாரம் யுவதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறிந்து , அந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அதன் போது தொடர்புடைய இளைஞன் , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதனால் செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து சென்றதாகவும் , அதன் போது வருத்தம் குணமடையாது அவரது நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் அந்த இளைஞனனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments