சபையில் சயந்தன் உருப்படியாய் என்ன செய்தார் ?


வடக்கு மாகாணசபையில் குழப்பவாதி எனப் பெயர் எடுத்த கே.சயந்தன் தொடர்ந்து சபையில் கதை கூறுவதிலும் பழமொழி கூறுவதிலுமே காலத்தைக் கழித்துவருகின்றார்.

வடக்கு மாகாணசபையின் நான்கு ஆண்டு காலத்தில் சயந்தன் உருப்படியாக மக்களுக்கு என்னசெய்தார் என்று கேட்டால் சொல்வதற்கு என ஒன்றுமில்ல. உருப்படாத வேலை என்ன செய்தார் எனக் கேட்டால் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சதித்திட்டத்திலிருந்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களைக் கூறலாம்.

இன்றும் சபையில் சீமெந்து ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த சயந்தன்  “ஏர் பிடிக்கிறவன் சொறிஞ்சால் எருது மச்சான் கொண்டாடும்” என ஒரு பழிமொழி உள்ளது எனக் கூறிவிட்டு வழமைபோல தானே பெரிதாகச் சிரித்துவிட்டு உட்கார்ந்துவிட்டார்.

வடக்கு மாணசபையின் அமர்வு இன்னும் இரு அமர்வுகளுடன் முடிவுறுத்தப்படுகின்றது. இந்நிலையிலும் சயந்தன் பசுபதிப்பிள்ளை போன்ற உறுப்பினர்கள் பழமொழி சொல்வதிலும் பாட்டுப் பாடுவதிலும்தான் காலத்தைக் கழித்துவருகின்றனர்.

No comments