சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக ரவிநாத் ஆரியசிங்க ?


சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக, மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரதஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றிய ரவிநாத ஆரியசிங்க, வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவார்.

அதேவேளை,தற்போது வெளிவிவகாரச் செயலராக பதவி வகிக்கும் பிரசாத் காரியவசம் மீண்டும் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

No comments