தெற்கினை திருப்திப்படுத்தியே தீர்வென்கிறார் மஸ்தான்!

தென்பகுதி மக்களையும் திருப்திப்படுத்திக் கொண்டுதான், உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக, அரச பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களுக்குச் சேவை செய்வதில் நல்லாட்சி அரசாங்கம் எந்தவகையிலும் பின்னிற்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்களுக்குச் சேவை செய்வதில் நல்லாட்சி அரசாங்கம் எந்த வகையிலும் பின்னிற்காதெனத் தெரிவித்த அவர், அதிலும் ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை சமூகத்துக்குச் சேவை செய்வதில் எந்தவகையிலும் பின்னிற்பதில்லையெனவும் கூறினார்.

அபிவிருத்தியுடனான உரிமைகளைத்தான்  தாங்கள் பெறவேண்டுமெனக் குறிப்பிட்டதுடன், இதனடிப்படையில் அரசாங்கமும் இவ்விடயத்தில் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆகவே, தென்பகுதியில் உள்ள பிரச்சினைகளையும் தென்பகுதி மக்களையும் திருப்திப்படுத்திக் கொண்டுதான், உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அபிவிருத்திகளை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, அவர் மேலும் கூறினார்.

No comments