திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்திய ஜனநாயகப் போராளிகள்

இன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத் தூபி முன் திலீபனின் 31ஆம் ஆண்டு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின. நிகழ்வில் இடையில் ஜனநாயகப் போரளிகள் துளசி தலைமையில் நிகழ்வின் மக்கள் வரிசையின் இடையே புக முற்பட்டபோது அங்கிருந்தவர்களால் தடுக்கப்பட்டனர். உருமறைப்பு ரீசேட் அணிந்த மற்றொரு முன்னாள் போராளி உதை நிப்பாட்டுங்கோ என கூறுகிறார். இதனையடுத்து வாய்ர்த்தக்கம் ஏற்படுகிறது.
எனினும் ஜனநாயக போராளிகள் கட்சி சாராத மற்றொரு போராளி முன்வந்து நானும் இயக்கம் தான். சனம் முன்னின்ற நிகழ்வுகளைச் செய்கிறார்கள் என்றால் நாங்கள் சந்தோசமாக விலகி நின்று பார்க்க வேண்டும். அதுதான் தேவை. எங்களுக்கு நாங்கள் நிகழ்வு செய்வது சரியில்லை. அண்ணை எனக்கும் உனக்கும் கிடைக்கிற புகழை நாங்கள் செய்யக்கூடாது. அது சனம் தான் செய்ய வேண்டும். அண்ணை நான் எந்த ஒரு நிகழ்வுக்கும் முன்னுக்கு வாறாதில்லை. ஆனால் சனம் செய்தால் அதை சந்தோசமாக நின்று பார்க்கிறவன் என துளசியிடம் விளக்குகிறார்.

குறித்த முன்னாள் போராளியின் கருத்தை உள்வாக்கிய துளசி கைலாகு கொடுத்துவிட்டு தன்னுடன் வந்த முன்னாள் போராளிகளுடன் அவ்விடத்தை விட்டுச் செல்கின்றார்.

#Thileepan #Nallur #Jaffna

No comments