முதலமைச்சரை கூண்டிலேற்ற சதி:பின்னப்படுகின்றது வலை?

வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை குற்றவாளி கூண்டில் ஏற்ற கொழும்பு அரசு தயாராகியுள்ளதாக கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்புக்கள் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடாக முன்னெடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 7ம் திகதி வழங்கப்படவுள்ளது.
ஏம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது கொழும்பு கூட்டுக்களின் நகர்வுகளின் பிரகாரம் முன்னாள் நீதியரசரான முதலமைச்சரை குற்றவாளிக்கூண்டிலேற்றி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்க வைக்க விரும்புவதாக தெரியவருகின்றது. நீதியரசர் நீதி தவறிவிட்டாரென்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கவே இந்நகர்வு முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

இதனிடையே முதலமைச்சரால் பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சராக்கும் வகையில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினையும் ஒத்தி வைக்கவேண்டுமென முதலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று உயர் நீதிமன்றில் நீதிபதிகள் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நகர்வின் ஊடாக முதலமைச்சரை கூண்டிலேற்றும் கொழும்பின் நகர்வு நீதித்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

#Chief Minister Vigneswaran #Balasubramaniam Deniswaran

No comments