பிடிவிறாந்தில் இருந்தவர் கசிப்புத் தயாரிப்பின்போது கைது செய்யப்பட்டார்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதி பகுதியில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிசாரினால் நேற்றிரவு மேற்கொண்ட வேளையில் குறித்த நபர் அப்பகுதியில் உள்ள வீடும் ஒன்றில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7500 மில்லி லீட்டர் கசிப்பு ,37500 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#Batticalo #karuvapankeny
Post a Comment