கோரவிபத்து! தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு!!
மகிழுந்து விபத்தொன்றில் தாயும் அவரது இரு மகள்களும் உயிரிழந்ததுடன், மகன் காயமடைந்துள்ளார்.இக்கோர விபத்து பொத்துவில் – அக்கறைப்பற்று வீதியில் இன்று காலை நடந்துள்ளது.
தாயுடன் பிள்ளைகள் வீதியில் சென்று கொண்டிருந்த போது, மகிழுந்து ஒன்று அவர்களை மோதித் தள்ளியுள்ளது.
விபத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment