மைத்திரியை அம்பாளிடம் அழைத்த சம்பந்தர்!



தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இரா.சம்பந்தர் மைத்திரி மற்றும் ரணிலோடு பேச போவதாக அறிவித்துவிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனாவை தனது ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு அழைத்துள்ளார்.

இன்று (20) முற்பகல் திருகோணமலை சிறீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்கு விஜயம்செய்த மைத்திரி அங்கு இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

நல்லாட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும் கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள் எனவும் எதிர் அரசியல் தரப்பினை சம்பந்தர் விமர்சித்துவருகின்றார்.

ஏற்கனவே சிறைச்சாலை திறப்பு தன்னிடமில்லையென்ற அவரது பேச்சு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அரசியல் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பில் குதித்துள்ள நிலையில் இரா.சம்பந்தர் மைத்திரி மற்றும் ரணிலோடு பேச போவதாக அறிவித்திருந்தார்.

நேரில் ஆட்சியாளர்களை தினம் தினம் காண்கின்றார். இன்னமும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க அவருக்கு முகூர்த்த நேரம் வரவில்லையா? ஏன கேள்வி எழுப்பப்பட்டுவருகின்ற நிலையில் தனது ஆலயத்திற்கு மைத்திரியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளார் சம்பந்தர்,

No comments