அதிகாரிகளிற்கு இடமாற்றம்:களமிறங்கிய சம்பந்தன்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை உத்தியோகத்தர்களையும் உடன் இடமாற்ற செய்ய இரா.சம்பந்தன் முன்வந்துள்ளார்.மாவட்ட மீனவ அமைப்புக்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்றைய தினம் சந்தித்தபோது விடுத்த கோரிக்கையினையடுத்து உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்த கூட்டமைப்பின் தலைவர் உடனடியாகவே கடற்றொழில் தீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் தொடர்பு கொண்டு பணியாளர்களை இடமாற்றம் செய்யுமாறு கோரியதாக தெரியவருகின்றது.அத்துடன் மீண்டும் இரகசியமான முறையில் மீன்பிடிக்கு வழங்கிய அனுமதியினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கூட்டமைப்பின் தலைவரின் ஏற்பாட்டில் நேற்று மாலையே கடற்றொழில் நீரியல்வளத் துறையின் பணிப்பாளர் நாயகத்துடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன் அடிப்படையில் மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர் , பரிசோதகர் மற்றும் சாரதி ஆகிய மூவரையும் உடனடியாக ஒக்ரோபர் முதலாம் திகதியுடன் மாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments