இலங்கை அகதிகளுக்கு உதவிகளில்லை?


இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கை ஈழத் தமிழர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். 

தமிழகத்தில்  119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள  இலங்கை அகதிகள் முகாம்களில்; 1 லட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆனால்  மண்டபம் முகாமில் மட்டும் தற்போது 533 குடும்பங்களில் மொத்தம் 1,673 பேர் வசித்து வருகின்றனர்.;

மண்டபம் முகாமில் வசித்து வரும்  இலங்கை அகதிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக உதவித்தொகை வழங்கப்படாததால்  குழந்தைகள் முதியவர்கள் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு  கடும் அவதியுற்று வருகின்றனர். மேலும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ள சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுவழங்கும் உதவித்தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் அலைகழிப்பு செய்து வருவதாக இலங்கை அகதிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.


     இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கூறுகையில் தமிழக அரசால் வழங்கப்படும்  உதவிதொகை 1ம் திகதி முதல் 5 ம் திகதிக்குள் வழங்கப்பட்டு வந்தது ஆனால் செப்டம்;பர் மாதத்தற்க்கான உதவி தொகை இன்று வரை வழங்கப்படவில்லை இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை தமிழக அரசால் வழங்கப்படும் உதவிதொகையை வைத்து உணவு பொருள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் ஆகிய செலவுகள் செய்து வருகிறோம் ஆனால் இந்த மாதம் உதவி தொகை கிடைக்காததால் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதியுற்று வருகிறோம்,அரசு வழங்கும் உதவிதொகையை அதிகாரிகள் தர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments