மைத்திரி நாடுதிரும்பியதும் அமைச்சரவை மாற்றம் ?


ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பியதும், அடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில்,

‘சிறிலங்கா நிதியமைச்சின் செயலராக, உள்ள ஆர்எச்எஸ் சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவருக்குப் பதிலாக, தனது தெரிவான ஒருவரை சிறிலங்கா ஜனாதிபதி நியமிக்கக் கூடும்.

அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சரவையில் இரண்டு புதுமுகங்கள் இடம்பெறக் கூடும்.

அவர்களில் ஒருவர் தயாசிறி ஜெயசேகர. மற்றொருவர் ஐதேகவைச் சேர்ந்த ரவி கருணாநாயக்க. எனினும் இந்த இரண்டு நியமனங்கள் தொடர்பாகவும் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments