நிர்வாணமாகவா புதைக்கப்பட்டார்கள்? மன்னார் புதைகுழி தொடர்பில் எழுப்பப்படும் புதிய கேள்வி?

மன்னார் சதோச வளாகத்தில் புதைக்கப்பட்ட சடலங்களை அனைத்தும் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாமோ என சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் சதொச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும், ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையிலேயே,  இவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும், தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அகழ்வுப் பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 97 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை  அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும், இதுவரை  துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்பந்தப்பட்ட எந்தவிதமான தடையப் பொருட்களும் கிடைக்கவில்லை.

#Mannar # Mass Grave # Mass grave in Mannar


No comments