மகாவலி மஹிந்த பிளான் என்கிறது நல்லாட்சி?


வடக்கில் மகாவலி திட்டத்தின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவது முன்னைய மஹிந்த அரசின் திட்டமென நல்லாட்சி அரசின் மகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க என்பவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே வடக்கிலும் தெற்கிலும் மகாவலித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் பிரதான நேக்கம் வடபகுதிக்கு நீரைக்கொண்டு செல்வதாகும். அதே போன்றுஒரு சிங்களவரையேனும் புதிதாக குடியமர்த்தும் தேவை எமக்க இல்லை. நாம் மகாவலித் திட்டம் மூலம் அவ்வாறு செய்ததும் இல்லை.

வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சமமான விதத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதே ஜனாதிபதியின் நோக்கம் வட பகுதி பிள்ளைகளும் கிழக்கு பிள்ளைகளும் எமது நாட்டின் பிள்ளைகளே பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டுமாக இருந்தால் மகாவலி அமைச்சுடன் கலந்துரையாடலாம் அதனை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் பலனில்லை.

1988 மற்றும் 2007 ஆம் ஆண்டு வர்ததமானியின் படியே அங்கு அபிவிருத்திகள் இடம்பெறுகின்றனதெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments