மௌனம் காத்திருக்கிறார் மனோகணேசன்?

வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அமைச்சர் மனோகணேசனிடம் வடமாகாண முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பதிலேதும் கிடைக்கவில்லையென தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக தமிழ் மக்களது கிராமங்கள்,வீதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களத்தில் பெயர்கள் சூட்டப்பட்டுவருகின்றது.

இதனை கருத்தில் கொண்டே தமிழ் கிராமங்கள் அதிலுள்ள வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் கோரிக்கை விடுத்துவிடுத்துள்ளார்.இது தொடர்பில் முதலமைச்சரால் எழுதப்பட்ட கடிதத்திற்கு மனோகணேசனிடமிருந்து மாதங்கள் கடந்தும் பதிலேதும் கிடைக்கவில்லையென முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாமென தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர், ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தான் அறிவித்திருப்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதட்ட நிலைமைகள் தொடர்பில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அந்த பகுதியை உள்ளடக்கும் பிரதேச சபை தலைவர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதி இன்றி எந்த ஒரு மத ஸ்தலத்தையும் கட்டுவிக்கவோ அல்லது சிலைகளை ஸ்தாபிக்கவோ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்னவுக்கும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்னாயக்கவுக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments