ஊடகவியலாளர்களிற்கு தடை?


கூட்டமைப்பின் வசமுள்ள கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கும் பிரதேச ஊடகவியலாளர்களிற்குமிடையே ஏற்பட்டுள்ள இழுபறிகளின் தொடாச்சியாக சபையின் நாளைய (21) விசேட அமர்வுக்கு,  ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்களென, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அறிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு, நாளை (21) பிற்பகல் 2 மணி முதல்  5 மணி வரை  நடைபெறவுள்ளது. 

கிளிநொச்சி சேவைச் சந்தையின் புதியக் கட்டடம் தொடர்பாகவும் கரைச்சி பிரதேச சபையின்  2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில்  உறுப்பினர்களுக்கான நிதி ஓதுக்கீடு பற்றியும் ஆராய்வதற்காக, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, நாளை விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காகவே, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப்பிரதேச சபையின் செயற்பாடுகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் போன்று செயற்படும் சில ஊடகவியலாளர்கள் மோசமாக விமர்சித்துவருவதாக வருவதாக , தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments