சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் தூபியில்?


மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் குழந்தைகள், கற்பிணிப் பெண் உள்ளிட்ட 186 அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 28 ஆண்டு இன்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்படுகிறது.
1990ம் ஆண்டு செப்ரெம்பர் 09ம் நாள், மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் படைமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சுற்றிவழைத்து அங்கிருந்த 186 அப்பாவித் தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றார்கள்.
இவர்களில் பெண்கள், குழந்தைகள், கற்பிணி பெண்கள், சிறார்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் சத்துருக்கொண்டான் படைமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
28 ஆண்டுகள் கடந்தும் பல ஆணைக்குழுக்கள் முன்னிலையில் மக்கள் சாட்சியம் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments