கண்ணிவெடியகற்றல் பணியாளரின் மனைவி தற்கொலை முயற்சி!


முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும்  உயிரிழந்துள்ளார். 


முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த திங்கட்  கிழமை நடந்த வெடி விபத்தில் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானை சேர்ந்த பி.திலீபன் (வயது 24) என்ற இளைஞன் உயிரிழந்ததுடன், வவுனியாவைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் (வயது 25) படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


 வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன்  மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, கணவன் வெடி விபத்தில் சிக்கியதை அறிந்த எஸ்.நிதர்சனின் மனைவி நி.சாரதா (வயது 22)  நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


No comments