கண்டிவெடியில் காயமடைந்த இரண்டாவது நபரும் இறந்தார்!

முல்­லைத்­தீவு, மாங்­கு­ளம் பகு­தி­யில் கண்­ணி­வெடி அகற்­றும் நடவடிக்கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்த போது மிதி­வெடி வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்­றைய இளை­ஞ­னும் நேற்று புதன்கிழமை உயி­ரி­ழந்­தார்.

 மாங்­கு­ளம் பாலைப் பணி என்ற இடத்­தில் கண்­ணி­வெடி அகற்­றும் நடவடிக்­கை­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்தபோது கடந்த திங்­கள் கிழமை நடந்த வெடி­வி­பத்­தில் கிளி­நொச்சி, பரவிப்பாஞ்சானை சேர்ந்த பி.திலீ­பன் (வயது – 24) என்ற இளை­ஞர் உயி­ரி­ழந்­தார்.

வவு­னி­யா­வைச் சேர்ந்த எஸ்.நிதர்­சன் (வயது – 25) படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றப்பட்­டார்.

வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் நிதர்­சன் நேற்று உயி­ரி­ழந்­தார். இதே­வேளை, கண­வன் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வதை வந்து பார்­வை­யிட்ட கர்பிணி­யான அவ­ரது மனைவி, கண­வ­னின் உடல் நிலை­யில் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை என்பதால், தவ­றான முடிவு எடுத்து உயிர்­து­றக்க முற்­பட்­டுள்­ளார் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

#Mines #Land Mines #Vavuniya #Mullaitivu

No comments