சுமந்திரனை ஏமாற்றிவிட்டார் அஸ்மின்!


முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் நியாயப்படுத்தியிருக்கிறார் என வடமாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தன்னை பதவியில் இருந்து நீக்க புலிகள் பாணியில் செயற்படவேண்டும் என்று அஸ்மின் கூறியுள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அண்மையில்த்தான் வடமாகாணசபையில் தான் பேசியபேச்சுக்களைத் தொகுத்துஒருநூல் வெளியிடவிருப்பதாகக் கூறிநான் அவரின் நூலுக்கு முகவுரை எழுதவேண்டும் என்றோ அல்லது வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்றோ அழைப்பு விடுத்திருந்தார்; அஸ்மின். 

ஆகவே தன்னுடைய கட்சியில் தனக்கு நேர்ந்தது எனக்கும் ஏற்படவேண்டும் என்ற நட்பெண்ணத்தில் அவர் இதைக் கூறியிருக்கலாம் அல்லது தனது இன மக்களுக்கு புலிகள் கையால் கிடைத்த பரிகாரத்தை நானும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். புலிகளின் தலைமைத்துவம் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் என்று கூறிய முதல் முஸ்லீமாக அவர் இருக்கக்கூடும்;. அவரின் இந்தக் கூற்றால் முஸ்லீம்களுக்குத் தமிழ் மக்கள் செய்த தவறுக்காக தமது வருத்தத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற அவரின் ஆப்த கொழும்பு நண்பர்களான சுமந்திரன் போன்றவர்களின் கோரிக்கைகள் விடுபட்டுப் போயுள்ளன என்றே கூற வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments