வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு!

வெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது. 

இதில், பங்கேற்ற ஜனாதிபதி மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார்.  அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

வெனிசுவேலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி மதுரோ உயிர் பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டு வெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது. 

No comments