இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது.

இந்த நிலையில் தற்போது குடியுரிமை கட்டணம் 1,012 பவுண்ட்ஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பெறாத இங்கிலாந்து இளைஞர்களால் உயர்கல்வியில் நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

மேலும் குடியுரிமை பெறாமல் வளரும் குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். தனது நண்பர்களுக்கு இருக்கும் உரிமை தனக்கு இல்லாததை மெதுவாக புரிந்து கொள்வார்கள்.

இது அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த கட்டண உயர்வானது மிக குறைந்த வருமானம் ஈட்டும் புலம் பெயர்ந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும்.

அவர்களை கடனாளியாக்கி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments