சரவணபவனின் தயாரிப்பே குள்ளமனிதர்கள்?


குள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் விவகாரம் பொய்யான சம்பவம் என காவல்துறை கூறுகின்றது.மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான சயந்தன்,குகதாஸ் போன்றோரும் குள்ளமனிதர் இல்லையென வாதிட்டுவருகின்றனர்.

இதனிடையே இதுவரை குள்ள மனிதனை நேரில் கண்டதாக ஒரு பொதுமகன்கூட கூறவில்லையென காவல்துறையினர் கூறியுள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் முதலமைச்சரிடம் கிட்டியுள்ளது. தனுரொக், ஆவா என்ற இரண்டு வாள்வெட்டு குழுக்களிற்கிடையிலான பிரச்சனையே இப்போது நடக்கிறது. இந்த விடயத்தில் ஊடகங்கள் இல்லாத பொல்லாத விடயங்களை எழுதுவதற்கு அரசியல் பின்னணியுள்ளதாகவே கருதுகிறேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குள்ளமனிதன் விவகாரத்தை ஆராய்ந்ததாகவும், குள்ளமனிதனை நேரில் கண்டதாக ஒருவரும் முறைப்பாடு தர தயாராக இருக்கவில்லையென சொன்னதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனே இந்த விடயத்தில் தீவிரமாக இருப்பதும், அவர் சரிந்த வாக்குவங்கியை ஈடுகட்ட குள்ளமனிதன் விவகாரத்தை பூதாகாரப்படுத்தும் உத்தியை கையாள்கிறார் என்றும் பரவலான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments