கோணமலையில் பாகிஸ்தான் இராணுவம்


பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு வந்த மேஜர் ஜெனரல் றெகான் அப்துல் பாகி,கேணர் ஒமர் நசிர், கேணல் ஜாவிட் அலி, மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப்பிரிவு தலைமையகம், மற்றும் கலத்தெவ, கொக்காவில், திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள கவசப்படைப்பிரிவு பயிற்சி பாடசாலை, ஆகியவற்றுக்கும் சென்றிருந்தது.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையிலான, பாதுகாப்பு பேச்சுக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்தே, இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

No comments