மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சிறப்பு விவாதம்


மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் நாள், காலை 11 மணி தொடக்கம், மாலை 6.30 மணி வரை இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

சபாநாயகர் கரு  ஜெயசூரிய நேற்று கட்சித் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்களை புதிய முறையில் நடத்துவதா, பழைய முறையில் நடத்துவதா என்பதில் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால், இழுபறிகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments