கருணாநிதிக்கு தீவிர சிகிற்சை! மருத்துவமனைக்கு வரத்தொடங்கிய குடும்ப உறுப்பினர்கள்!

கருணாநிதிக்கு 24 மணி நேரம் குறிக்கப்பட்டு, அதன்படி தீவிர சிகிச்சை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் முதலே காவேரி மருத்துவமனை பரபரப்பின் பிடியில் சிக்கியது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் எல்லோருமே வரத் தொடங்கிவிட்டனர்.

இதுவரை ஒருமுறைகூட வராத தயாளு அம்மாளும் நாற்காலியில் உட்கார வைத்து அழைத்து வரப்பட்டிருந்தார். நேற்றிரவு 11 மணி வரை குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து திமுக தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனையிலேயே காத்து கிடந்தனர்.

இவர்கள் அனைவருமே மருத்துவமனையிலேயே இருந்தது தொண்டர்களை மேலும் பீதியில் ஆழ்த்தியது. எனவே நேற்றிரவு 11 மணிக்கு மேல் ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு புறப்பட தொடங்கினார்.

அவரை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களும் எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக கிளம்பினர். ஆனால் கனிமொழி மட்டும் விடிய விடிய மருத்துவமனையில்தான் அவர் இருந்தார். சற்று நேரம் வெளியில் சென்றிருந்த அவர் மீண்டும் மருத்துவமனைக்கு தன் கணவருடன் வந்துள்ளார்.

அதேபோல ஸ்டாலினும் தற்போது மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதேபோல, ராஜாத்தி அம்மாள், ஆ.ராஜா உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். இவர்களை தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களும் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் கருணாநிதி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதால், தொண்டர்களின் வருகையும் குவியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

No comments