சாவகச்சேரியில் புகையிரத விபத்து - இரு இளைஞர்கள் பலி


சாவகச்சேரி அரசடியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பாதுகாப்பு எச்சரிக்கை சமிக்ஞையை மீறி கடவையை கடந்த மோட்டார் சைக்கிளை விரைவு ரயில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று (22.08.2018) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த விரைவு புகையிரத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் அவர்களின் அடையாள அட்டை உறுதிப்பாட்டுடன் இருவரும் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என அறியக் கிடைத்துள்ளது. சம்பவ இடத்தில் பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments