மகிந்தவின் வீட்டில் சுப்பிரமணிய சுவாமி !


இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார்.

கொழும்பில் இருந்து  உலங்குவானூர்தி மூலம் மெதமுலானவுக்குச் சென்ற சுப்ரமணியன் சுவாமி, அங்கு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்ச நேற்று மரணமானார். அவரது உடல் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

சந்திர ராஜபக்சவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சுப்ரமணியன் சுவாமி, அதையடுத்து மகிந்த ராஜபக்சவை அடுத்த மாதம் புதுடெல்லியில் நடத்தவுள்ள கருத்தரங்கில் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

தனது மிகவும் நல்ல நண்பரான சுப்ரமணியன் சுவாமியின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக கீச்சகத்தில் பதிவிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, அவர், சிறிலங்காவின் நீண்ட கால நண்பன் என்றும், எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசி வந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments