நீதிதேவனாகின்றார் கே.சயந்தன்!

இலங்கையின் வடபுலத்தில் கைதாகும் முக்கிய சந்தேக நபர்களை விடுவிப்பது தொடர்பில் அரசியல் சட்டத்தரணிகள் சிலர் பின்னிற்பது அம்பலமாக தொடங்கியுள்ளது.

இதற்கென கொள்ளை மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்ட பலருடன் இத்தகைய சட்டத்தரணிகள் பின்னணியில் முன்னின்று செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.குறிப்பாக சயந்தன் மற்றும் சிறீகாந்தா ,மு.ரெமீடியஸ் போன்றோர் இக்கும்பல்களில் முக்கியமாவனவர்களென தகவல்கள் தெரிவிக்கின்றன்.

இதனிடையே பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒண்றிணையும் வாள்வெட்டுக்கும்பல்கள் பற்றி அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயந்தன் புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.


ஆவா குழுவினர் மற்றும் இருநூறிற்கும் மேற்பட்ட அவர்களது சகாக்கள் இணைந்து படகுகளை வாடகைக்கு அமர்த்தி,யாழ் மாவட்டத்தை அண்மித்துள்ள தீவுப்பகுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவா என்பவர் வருடத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட தடவைகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார். தமது குழுக்களை ஒன்றிணைப்பதற்கான கருவியாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை இவர்கள் பயன்படுத்துகின்றனரென வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


இதனிடையே சாவகச்சேரியில் வாள்களுடன் கைதான வாள்வெட்டு கும்பலை பிணையில் விடுவிக்க சயந்தன் ஆஜராகியிருந்த நிலையில் ,பிணைமனுவை நிராகரித்துள்ள நீதிவான் தொடர்ந்து சிறையிலடைத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.


ஏற்கனவே சாவகச்சேரியில் நடைபெற்ற பெண்கள் கடத்தல்கள்  உட்பட்ட பல சம்பவங்களில் சயந்தனின் குண்டர்படை  ஈடுபட்டு இருந்தமை தெரிந்ததே.

No comments