சிறீதரனின் ஏற்பாட்டில் வாஜ்பாயிற்கு கிளியில் அஞ்சலி?

தனது இந்திய விசுவாசத்தை வெளிப்படுத்த பாரதீய ஜனதாக்கட்சி முன்னாள் தலைவர்களுள் ஒருவரும்,முன்னாள் பிரதமருமான வாஜ்பாயிற்கான அஞ்சலிக்கூட்டமொன்றை கிளிநொச்சியில் அரங்கேற்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தயாராகிவிருகின்றார்.

அண்மையில் காலமாகிய தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதியினையும் இணைந்து இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கான அஞ்சலி நிகழ்வொன்றிற்கே கிளிநொச்சியில் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அனைத்து செலவுகளிலும்; இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம் சிறப்புரையாற்றவுள்ளார்.

தனது பெண் பணியாளரான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகியிருந்த போது அது இந்திய சதியென விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம் வாதிட்டு வந்திருந்தார்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்த இந்தியாவின் இரு தலைவர்களுக்கும் , ஈழத்தில் அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களிடையே கேள்வியை தோற்றுவித்துள்ளது.

No comments