பண்டாரவன்னியனிற்கு விழுந்த பழைய மாலை?


பண்டாரவன்னியன் ஞாபகார்த்த நிகழ்வுக்கு வருகை தந்த பிரபலங்கள் சிலைக்கு அணிவித்த மாலைகளை மீளமீள கழற்றியெடுத்து தாங்கள் அணிவித்து படமும் பிடித்துக்கொண்ட பரிதாபம் வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் வவுனியாவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் தூபி பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு கைகளை ஆட்டியவாறு புதிதாக உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் முளைத்த அரசியல்வாதிகள்; பலரும் வந்திருந்தனர்.எனினும் சிலைக்கு அணிவிப்பதற்கு எடுத்துவரப்பட்ட மாலைகளின் எண்ணிக்கையோ போதாதேயிருந்துள்ளது.


இதனையடுத்து மாலைகளை போதாத நிலையில் பண்டாரவன்னியன சிலைக்கு ஏற்கனவே மற்றவர்களால் போடப்பட்ட மாலைகளை மீள கழற்றப்பட்டு மீண்டும் மீண்டும் போடப்பட்டதுடன் புகைப்படமும் பிடித்துக்கொண்ட பரிதாபம் நடந்தேறியுள்ளது.

No comments