யாழ் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் சித்திரவதை - அதிர்ச்சிப் புகைப்படங்கள்


யாழில் கைது செய்யப்படும் குற்றச் சந்தேக நபர்களை பொலிசார் துன்புறுத்தும் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கைதான இளைஞனுக்கு கைவிலங்கிட்டு கடுமையாகத் தாக்குவதும் கால்களால் உதைப்பதுமாக குறித்த படங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.


சந்தேக நபராக விலங்கு இடப்பட்டு கைதான இளைஞன் ஒருவரை பொலிஸ் காவலில் வைத்து தாக்கும் காட்சிகளை பொலிசார் ஒருவர் புகைப்படங்களாக எடுத்து அவரது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பியதோடு உங்களுக்கும் இவ்வாறே நடக்கும் என எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.

வாள்வெட்டுக் குழுக்களுக்கு ஆதரவாக அவர்களைக் கைது செய்யாது வேடிக்கை பார்க்கும் பொலிசார் சிறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படும் அப்பாவிகளை துன்புறுத்துவதாக குறித்த இளைஞனின் நண்பர் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments