மரண தண்டனைக்கு பாப்பரசர் எதிர்ப்பு


சிறிலங்காவில் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவந்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட அமைப்புக்கள் சிறிலங்கா அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

எனினும் யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்தியே தீருவது என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மரண தண்டனையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என பாப்பரஸர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments