நாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை


யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாச்சிமார் ஆலயம் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவஆக்கிரமிப்பில் இருந்துவரும் நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து  ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய தர்மகத்தாக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு இராணுவத்தினர் சில ஆலயங்களுக்கு சீமெந்து பக்கற்றுக்கள் மற்றும் மணல் மண் வழங்கின்னறர். நாகர்கோவில் உள்ளிட்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தங்கள் ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டு இவ்வாறு இராணுவத்தினர் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவ்வாலய தர்ம கத்தாக்கள் மற்றும் அடியவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அவ் ஆலய வளாகத்தில் மாமிசங்கள் புசிப்பதாகவும் இது மிகவும் அருவருக்கத்தக்க செயல் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments