கலைஞருக்கு அஞ்சலி:பின்னர் வழமை போல சண்டை!


தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு வடக்கு மாகாண சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் அமர்வு தொடங்கிய போது தமிழக முதல்வரிற்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கட்சி பேதங்களை கடந்து தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கலைஞரிற்கான அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் வழமை போலவே அமைச்சர்கள் கதிரைச்சண்டை மற்றும் குடுமிப்பிடி சண்டைகளுடன் வடமாகாணசபை அமர்வு நடைபெற்றுவருகின்றது.

இதனிடையே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குறித்த ஆஜராகும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் இன்றைய அமர்வில் முக்கிய விடயமாக உறுப்பினர்களிடையே பேசுபொருளாகியிருந்தது. 

No comments