வடமாகாணசபை:முதலமைச்சர்-ஆளுநர் இறுபறி உச்சத்தில்?


வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வாக தனது அமைச்சரவையினை கலைத்துவிடும் முடிவுக்கு முதலமைச்சர் வந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே கோரியுள்ளமை உள்ளக நோக்கத்தை கொண்டதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வுடமாகாண ஆளுநர் கொழும்பின் வழிகாட்டலில் அதிலும் தமிழரசு நிகழ்ச்சி நிரலிற்கு ஆட்டம் போடுவதாக முதலமைச்சர் தரப்பு விமர்சித்து வருகின்றது.குறிப்பாக முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டமை  ஆளுநர் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை.அதிலும் அவை தலைவர் முதல் சயந்தன் ஈறாக பலரும் மக்கள் எழுச்சியால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர்.

இதனிடையே ஆளுநரது தவறு காரணமாகவே டெனீஸ்வரன் விவகாரம் தோன்றியதென்பதில் முதலமைச்சர் தெளிவாக உள்ளதாக தெரியவருகின்றது.இதனால் ஆளுநரே அதற்கான தீர்வை காணவேண்டுமென முதலமைச்சர் கூறிவருகின்றார்.

இதனிடையே வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினால், வட மாகாண அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால், அமைச்சர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.  இதனால், மாகாண அமைச்சரவை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை நிறைவேற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சபையின் ஆட்சிக்கால முடிவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களினை முன்னிறுத்தியும் அதிகாரமற்ற மாகாணசபை தொடர்பில் தெளிவுபடுத்தவும் கூண்டேர்டு ராஜினாமா பற்றி முதலமைச்சர் தனது சகாக்களுடன் ஆலோசித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் தமிழ் மக்களிடையே ஏற்படக்கூடிய பரிதாப அலை தொடர்பில் தமிழரசும் ஆளுநரும் கவலை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகி, புதிய அமைச்சர்களை நியமிக்க வழி செய்வது தான், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த வழிமுறையாகுமென  ஆளுநர் தற்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments