காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் கொண்டாடும் சிறிலங்கா அரசாங்கம்


தனது நாட்டு மக்களை பலவந்தமாக கைது செய்தும் கடத்தியும் காணாமல் ஆக்கிவிட்டதோடு காணமல் ஆக்கிய பலரை படுகொலை செய்துவிட்ட சிறிலங்கா அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான சர்வதேச தினத்தை அனுஸ்டிக்க முனைப்புக்காட்டிவருகின்றது.

அவ்வகையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்க திர்மானித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் ஊடாக இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி திருமதி தீபிகா உடுகம இந்த நிகழ்வுகளில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments