மன்னார் புதைகுழி 81?:ஊடகங்களிற்கு தடை!



மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் (சதோசா) வளாகத்திற்குள் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளில் படம்பிடிக்க மன்னார் நீதவான் தடைவிதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் நீதிமன்றத்தில்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எண் 232-2018 பிரகாரம் புதைகுழிப்பகுதியில் நுழைந்து, படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் டி.ஜே. பிரபாகரனால் கையொப்பமிடப்பட்ட கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸின் வேண்டுகோளின் பேரிலேயே, ஆகஸ்ட் 7 ம் திகதி ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகவியலாளர்கள் குழுவொன்று  மன்னார் புதைகுழிப்பகுதியில் ஒரு ஆவணப்படம் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகக பொய்யான செய்திகளை; சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இது உண்மை அல்ல, அதிகாலையில், ஊடகவியலாளர்கள் அரை மணி நேரத்திற்கு காலை மற்றும் மதியம் ஆகிய இரு சந்தர்ப்பங்களில்; பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். 

எந்தவொரு பத்திரிகையாளரும் அந்த தளத்தை அணுகுவதற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக டாக்டர் இராஜபக்ஸவும் தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்பு படையினரின் காவலில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர், இந்த பொதுமக்கள் படுகொலை குழியானது அவர்களின் தலைவிதியை ஒரு முக்கியமாகக் கொள்ளும் ஒரு பிராந்தியமாக உள்ளது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே மாதம் அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 81 மனித வன்கூட்டுதொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் எழுபது மனித வன்கூட்டுத்தொகுதிகள் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments