மன்னார் புதைகுழியில் 102 எலும்புக்கூடுகள் மீட்பு


மன்னார் சதோச வளாகத்தில், இன்று 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 95 மனித எச்சங்கள் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட எச்சங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, சுமார் 440க்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்றப் பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மன்னாரில், மழை பெய்யும் பட்சத்தில், மன்னார் சதொச வளாகம் முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில், கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக, திடீரென மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதால், குறித்த வளாகத்தின் முன் பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திடீரென மழை பெய்யும் பட்சத்தில், குறித்த வளாகமானது, முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments