பௌத்த விகாரை கட்டவில்லையென்கிறார் கூரே?

கொக்கிளாய் நாகவிகாரைக்கான காணியினை சிங்கள பௌத்த பிக்குவிடம் கையளிக்க கோரிய வடக்கு ஆளுநர் தற்போதைய தனது கிளிநொச்சியில் விகாரை அமைக்கும் பணிகள் பற்றி பொய் சொல்வதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும்,  இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுநர்; நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,  முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, விகாரைகள் கட்டப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக கொக்கிளாயில் தமிழ் மகன் ஒருவனது காணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுவரும் விகாரை தொடர்பில் ஆளநரது பெயர் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

தனது அலுவலகத்திற்கு குறித்த தமிழ் பொதுமகனை அழைத்த ஆளுநர் அவரை மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments