சரத்பொன்சேகா துரோகி:சிவாஜி குற்றச்சாட்டு!

சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனக்கு நம்பி வாக்களித்த தமிழ் மக்களிற்கு துரோகம் இழைத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்;திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கே.சிவாஜிலிங்கம் சரத்பொன்சேகா ஒரு போர்க்குற்றவாளி.அவ்வாறிருந்தும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் கோரிக்கையின் பேரில் தமிழ் மக்கள் அவருக்காக வாக்களித்தனர்.

ஆனால் இன்று சரத்பொன்சேகா நன்றி மறந்து காணிகள் விடுவிப்பு பற்றி பேசுகின்றார்.

நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இராணுவம் அனைத்து மாகாணங்களிலும் பங்கிடப்பட்டிருந்தால் அது நியாயமானது.அதனை விடுத்து வடக்கில் குவித்து வைத்திருப்பதே தவறு என்கிறோமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

இதனிடையே பொதுமக்களின் காணிகளை  திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக,  சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட்டாள்தனமானது. ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாதென சரத்பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments