கையும்மெய்யுமாக தென்னிலங்கை மீனவர்கள் கைது!

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் உறுதி வழங்கி திரும்பிவிட்ட நிலையில் பருத்தித்துறை முனைப்பகுதியில் 19 தென்னிலங்கை மீனவர்கள் இன்று கைதாகியுள்ளனர்.அவர்களால் சட்டபூர்வமான தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆறு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து சுமார் 15ஆயிரம் கிலோகிராம் வகையிலான மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

முற்றாக கொன்றழிக்கப்பட்ட சிறிய இன மீன்கள் உள்ளடங்கியதாக மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் சுருக்குவலைகளை கொண்டு இவர்கள் மீன்பிடித்த போதே இவ்வளவு மீன் அகப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.

தென்னிலங்கையினை சேர்ந்த மீனவர்களை வெளியேற்ற கோரி மைத்திரியின் யாழ்.வருகையின் போது ஆர்ப்பாட்டமொன்றை நடத்த மீனவ அமைப்புக்கள் முற்பட்டிருந்தன.

எனினும் தென்னிலங்கை மீனவர்களது மீன்பிடி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழியினையடுத்து அப்போது போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வரை மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச்செய்யப்படாது தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 

No comments