காற்றில் பறந்தது கடற்றொழில் அமைச்சர் உறுதி மொழி!


வடமராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கடலட்டைத் தொழிலிலை நிறுத்துவதாக அமைச்சருடனான கலந்துரையாடலின்போது வாய்மூலமாகவே கூறப்பட்டிருந்தது.இருப்பினும் எமக்கு பணிப்பாளர் நாயகத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான உத்தரவுகளும் வரவில்லை. அவ்வாறு ஏதாவது உத்தரவுகள் கிடைத்தால் மட்டுமே அதனை அமுல்படுத்தக்கூடியதாக இருக்குமென கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் யாழில் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பகலில் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுழியோடிகள் கடலில் உள்ளுர் மீனவர்களது வலைகளை அறுப்பது தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. அண்மையில் 27 படகுகள் இரவில் தொழில் புரிந்த நிலையில் அகப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து 22ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த ஜனாதிபதி முன்பாக போராட்டம் நடாத்த மீனவ அமைப்புக்கள் முடிவெடுத்திருந்தன. இதனையடுத்து மீனவ சம்மேளனத்தால் இரவு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் பங்கெடுத்த கடற்றொழில் அமைச்சர் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடல் அட்டை பிடிப்போரை முழுமையாக அகற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார். இந்த நிலையில் 22ம் திகதி இரவு உள்ளுர் மீனவர்கள் முன்பதாக தென்னிலங்கை மீனவர்கள் வலைகளை அறுத்தெறிந்தவாறு தொழிலில் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில் மைத்திரி வருகையின் போது போராட்டம் நடைபெறுவதை தடுக்கவே அமைச்சர் வெறும் வாக்குறுதிகளை வழங்கியதாக சொல்லப்படுகின்றது.ஊடகவியலாளர்கள் இச்சந்திப்பில் நின்றிருந்த போது உறுதி மொழியை வழங்க மறுத்த அமைச்சர் அவர்கள் வெளியேறிய பின்னர் உறுதி மொழியை வழங்கியதாக தெரியவருகின்றது.

குறிப்பாக மீனவ சம்மேளனம் சோரம் போய் மீனவர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக உள்ளுர் மீனவர்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

No comments