திருமலைக்கு படையெடுக்கும் கப்பல்கள்?


திருகோணமலை துறைமுகத்தில் சர்வதேச நாட்டுக்கப்பல்கள் பலவும் படையெடுத்துவருகின்ற நிலையில் அஸ்ரப் இறங்குதுறைக்கு அமெரிக்க நாசகாரி கப்பலும் வருகை தந்துள்ளது.தற்போது தரித்திருக்கும் அமெரிக்க கப்பல் 208 மீற்றர் நீளமுடைய கடற்படை கப்பலாகும்;. 900 வீரர்களும் 34 அதிகாரிகளும் அதில் உள்ளனர். 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இது தரித்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஜப்பான்,மற்றும் இந்திய கப்பல்கள் தரித்து நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments