மகிந்தவும் சந்திரிக்காவும் தேர்தலில் போட்டியிடலாம் !


ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு நடைமுறையில் காணப்படுகின்ற அரசியலமைப்பு முறைக்கமைய, எந்தவித தடையும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. நாட்டில் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த வரலாற்றை நோக்குமிடத்து, புதிதாக கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்ட சீர்திருத்தத்திற்கமைய ஒரு ஜனாதிபதியின் பதவிகாலம் 5 வருடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அமைவாகவேயே முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

அன்று ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரச தரப்பில் அனைத்து பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும் பொறுப்பு கொண்டிருந்ததோடு, அரசியலமைப்பினூடாக பாராளுமன்றுக்குப் பொறுப்பு கூற வேண்டிய தேவை இன்மை மற்றும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை கொண்டிருந்தார்.

எனினும், நடைமுறையிலுள்ள ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரமில்லை. 19ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், நாட்டின் ஜனாதிபதியாகும் நபர் மீண்டும் இரண்டாவது முறையாக பதவியிலிருக்க முடியாது என 31ஆவது பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய பிரிவில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற ஜனாதிபதி பதவியும் இன்று மைத்திரிபால சிறிசேன பெற்ற பதவியும் வோறானதாகும்.

அதனை மிகத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுமிடத்து, தற்போதைய ஜனாதிபதி பதவிக்குத் தேவையாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ நடைமுறையிலுள்ள ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடலாம்.

நாட்டில் ஒரு சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாக்குகளை வழங்கவும் சிலர் மஹிந்தவுக்கு வாக்குகளை வழங்கவும் தயாராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் வாக்குரிமையுள்ள அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தமது பிரதான மனித உரிமைகள் தொடர்பில் வித்தியாசமொன்றைப் பெற வேண்டும் என நான் நம்புகின்றேன் என்றார்.

No comments