வடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா?

வடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச்சரவையுடன் ராஜினாமா செய்யலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் மூலம் மாகாணசபைக்குள்ள அதிகாரம்,ஆளுநரது குறுக்கீடு மற்றும் தமிழரசுக்கட்சியின் துரோகத்தனம் போன்றவற்றினை அம்பலப்படுத்த இதனை பயன்படுத்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக பா.டெனீஸ்வரனிற்கு பதவி ஆசை ஊட்டி பின்னாலிருந்து தமிழரசுக்கட்சி தலைமையே குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக முதலமைச்சர் கருதுகின்றார்.  அதை பின்னாலிருந்து தூண்டிவிடுவது சுமந்திரன் என்று நம்பும் முதலமைச்சர் அதனை தடுத்து நிறுத்த கட்சி தலைவர் சம்பந்தன் விரும்பவில்லையாவென்ற கேள்வியையும் மனதில் கொண்டிருக்கின்றார். 
பா.டெனீஸ்வரன் வழக்கு தொடர்ந்தது தவறானது என கட்சி கூட்டத்தல் கூறியுள்ள இரா.சம்பந்தன், இந்த விவகாரம் இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதென்பது தனக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை முதலமைச்சர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு என்ற பேரில் தன்னை நீதிமன்ற கூண்டில் ஏற்ற முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் இரா.சம்பந்தனின் திருட்டு மௌனம் அவரை சீற்றமடைய வைத்துள்ளது.

இதனிடையே தொடர்ந்து அரசியலில் இருக்க முதலமைச்சர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி அரசுடன சேர்ந்து முன்னெடுக்கும் சதிகளை அம்பலப்படுத்த அமைச்சரவையுடன் ராஜினாமா பொருத்தமானதென தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை தலைவர்களுடன் முதலமைச்சர் கலந்தாலோசனைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. 

No comments