மைத்திரிக்கு கறுப்புக்கொடி


யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ஐனாதிபதி வருகையின்போது கறுப்பு கொடி போராட்டம் நடாத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர் மானித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை மீறி கடலட்டை பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதுடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக நடந்து வருகிறது.

இன்று நாகர்கோவில் கடற்பகுதியில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் நாளை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த சந்திப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம் நடாத்துவதெனவும், 22ம் திகதி மயிலிட்டி பகுதிக்குவரும் ஐனாதிபதிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடாத்துவதெனவும் தீர்மானிப்போம் எனவும் மீனவர்கள் கூ றியுள்ளனர்.

No comments